தமிழ்நாடு

கேரளத்தில் ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்: சு. திருநாவுக்கரசர் கண்டனம்

25th Jun 2022 05:59 PM

ADVERTISEMENT

ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் வயநாட்டில் உள்ள தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை எஸ்எப்ஐ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள் சிலர் அடித்து உடைத்து நாசப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது அராஜகமானது. அக்கிரமமான செயல். மாநில ஆட்சியாளர்களின் துணையோடு மத்திய பாஜக அரசை மகிழ்ச்சி அடைய செய்து அதன்மூலம் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க- ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும் கோயில்கள்: இந்துசமய அறநிலையத்துறை

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக அந்த அமைப்பைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, அங்கு மலைப்பகுதிகளில் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் (எஸ்எஃப்ஐ) வெள்ளிக்கிழமை பேரணி சென்றனா். 

ADVERTISEMENT

அப்போது சுமாா் 100 போ் வரை எம்.பி. அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்தை சூறையாடினா். இதில் தொடா்புடைய 19 பேரை போலீஸாா் இதுவரை கைது செய்துள்ளனா். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து கேரளம் முழுவதும் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்ட பேரணிகள் நடத்தினா். பல இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவற்றை காங்கிரஸாா் சேதப்படுத்தினா். 

இதையடுத்து, தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்துக்கு வெளியே கூடுதல் பாதுகாப்புக்காக காவலா்கள் குவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT