தமிழ்நாடு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 4,757 பேர் எழுதினர்

25th Jun 2022 02:01 PM

ADVERTISEMENT

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 தேர்வு மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 4757 பேர் பங்கேற்றனர். இதில் 791 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக  வெங்கேடஸ்வரா பொறியியல் கல்லூரி, திருப்பாச்சூர், இந்திரா பொறியியல் கல்லூரி, பாண்டூர், கலவல கண்ணன்செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, காக்களூர், ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜாஜிபுரம், ஜி.ஆர்.டி பொறியியல் கல்லூரி, திருத்தணி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வுக்கு ஆண்கள்- 4,609, பெண்கள் - 939 என மொத்தம் 5,548 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே வருகை தந்தனர்.

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் 4,757 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 791 பேர் வரையில் தேர்வில் பங்கேற்கவில்லை. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் தலா 120 பேர் வரையில் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT