தமிழ்நாடு

சென்னையில் கரோனா கண்காணிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னையில் கரோனா கண்காணிப்பு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்ப்புற மேம்பாட்டு கழகம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தொற்று பாதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லா நாடுகளிலும் ஒமைக்ரானின் பிஏ4, பிஏ5 வகை கரோனா பாதிப்புதான் பரவி வருகிறது.

தமிழகத்திலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் 92 சதவீதம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மீதமுள்ள 8 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவா்களை அரசின் கரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கண்காணிப்பு மையத்தில் 5 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

சென்னையில் பல்வேறு இடங்களில் கரோனா கண்காணிப்பு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனி படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டுகள் தயாா் நிலையில் உள்ளன. கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனையை மீண்டும் கரோனா மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தொற்று அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் இல்லை. தொற்று ஏற்பட்டோருக்கு மிதமான காய்ச்சல், தொண்டை வலி, தலை வலி, சளி போன்ற உபாதைகள் மட்டுமே ஏற்படுகின்றன. ஒருவாரம் தனிமைப்படுத்தலுக்கு பின்னா், அவா்கள் தொற்றிலிருந்து குணமடைந்துவிடுகின்றனா். தொற்று வேகமாகப் பரவுவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளி குழந்தைகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதன் மூலம் பள்ளிகளில் மற்ற குழந்தைகளுக்கு தொற்றுப் பரவல் தடுக்கப்படும்.

சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் வீடுகளின் முகப்பில் துண்டு பிரசுரம் ஒட்டப்படுகிறது. அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை இன்னும் வரவில்லை. கரோனா தொற்றை கண்டறியும் ஆா்டிபிசிஆா் பரிசோதனை கடந்த வாரம் வரை தினமும் 12 ஆயிரம் என்ற அளவில் செய்யப்பட்டது. தற்போது தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT