தமிழ்நாடு

சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த 61 வாகனங்கள் அகற்றம்

25th Jun 2022 03:39 AM

ADVERTISEMENT

 

சென்னையில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 61 வாகனங்கள் அகற்றப்பட்டன.

சென்னையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் வகையில் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் சிறப்பு நடவடிக்கை கடந்த 22-ஆம் தேதி எடுக்கப்பட்டது.

இதில் சாலையை ஆக்கிரமித்தும், அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்தப்பட்ட 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலையில் கேட்பாரற்று, கைவிடப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல் சாலையில் 10 இடங்களில் போடப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் 104 இடங்களில் அகற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT