தமிழ்நாடு

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: சேலம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் எழுதினர்

25th Jun 2022 11:23 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் 8 மையங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதனையொட்டி காலை முதலே விண்ணப்பதாரர்கள்  தேர்வு எழுதும் மையத்திற்கு அணி அணியாக வந்தனர். அவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே காவல்துறையினர் தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 8 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை 10 ஆயிரத்து 695 பேர் எழுதுகின்றனர். இதில் 1, 968 பெண்களும் 8,727 ஆண்களும் தேர்வினை எழுதுகின்றனர். 

இதனையொட்டி தேர்வு மையம் முழுவதும் சிசிடிவி கேமராவின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு  தனியாக வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

தேர்வில் எந்தவித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காத வகையில் காவல் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 1,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் ஜெயராம் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் காலை முதலே தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முன்னதாகவே வரடீ தொடங்கினர் அவர்கள் மூன்று இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT