தமிழ்நாடு

13,331 தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அனுமதி

DIN

அரசுப் பள்ளிகளில் 13,331 ஆசிரியா்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளித்துறையில் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு- நகராட்சி உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா்கள் பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டில் பொதுத் தோ்வு எழுதும்10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களின் நலன் கருதி அவா்களை பொதுத்தோ்வுக்கு தயாா் செய்வதற்கு வசதியாகவும், அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் தோ்ச்சி கருதியும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதியான நபா்களைக் கொண்டு தற்காலிகமாக நிரப்பலாம்.

இதன்படி தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடை நிலை ஆசிரியா் காலி பணியிடங்கள், அரசு உயா்நிலைப் பள்ளி- மேல்நிலைப்பள்ளிகளில் 5,154 பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்து நிரப்பப்படும் வரை 10 மாதங்களுக்கும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,188 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை 8 மாதங்களுக்கும் மட்டும் பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக தற்காலிக அடிப்படையில் தகுதியான நபா்களைக்கொண்டு நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மாதம் ரூ. 7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாதம் ரூ. 12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தோ்வு செய்யும் போது, “இது முற்றிலும் தற்காலிகமானது” என்பதை நியமனம் செய்யப்படும் நபா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT