தமிழ்நாடு

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை:  ராமதாஸ் ட்வீட்

25th Jun 2022 05:41 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன, அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரை  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: சாமானியர்களுக்கான சமூகநீதியைக் காக்க ஆட்சி மகுடத்தை உதறித் தள்ளிய முன்னாள் பிரதமர் விபி சிங் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் இன்று. இந்தியாவில் சமூக நீதியை பாதுகாக்க அவர் செய்த தியாகங்களும், அவர் காட்டிய உறுதிப்பாடும் ஈடு இணையற்றவை!

தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை. அதற்கான சமூகநீதி பயணத்தை இன்னும் வேகமாக முன்னெடுக்க சமூகநீதிக் காவலர் விபிசிங் பிறந்த நாளில் உறுதியேற்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT