தமிழ்நாடு

புதுவை ஜிப்மரில் சர்வதேச பொது சுகாதார மையம்: மத்திய அமைச்சர் தொடக்கிவைத்தார்

25th Jun 2022 12:32 PM

ADVERTISEMENT

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சர்வதேச பொது சுகாதார மையத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடக்கிவைத்தார். 

புதுவைக்கு வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரோவில்லில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தொடர்ந்து, காலை 11 மணிக்கு கோரிமேட்டில் உள்ள தேசிய நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (வெக்டர் கண்ட்ரோல்) மருத்துவப் பூச்சியியல் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன வசதிகளை பார்வையிட்டு,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பிறகு 12 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். ஜிப்மர் வளாகத்தில் ரூ.65.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதாரப் பள்ளியை திறந்து வைத்து, மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்பிக்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜிப்மரில், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உர அமைச்சகத்தின் கூட்டுக் கூட்டத்தில் அதன் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்து, விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டில் உள்ள சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்துக்குச் சென்று மத்திய அமைச்சர் ஆய்வு செய்கிறார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT