தமிழ்நாடு

யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான வழக்குக்கு இடைக் காலத் தடை

25th Jun 2022 03:36 AM

ADVERTISEMENT

கோயில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், யுடியூபருமான காா்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவா் தாக்கல் செய்திருந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தனிப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம் கேட்டுள்ளதாகவும் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT