தமிழ்நாடு

அணைக்காடு கிராமத்தில் குதிரை வண்டி பந்தயம் கோலாகலம்

DIN

பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில் குதிரை வண்டி பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. 

தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு காரணமாக குதிரை வண்டி பந்தயம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு குதிரை வண்டி பந்தயம் நடத்துவதாக கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு 32-வது ஆண்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த குதிரை வண்டி பந்தயத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குதிரை வண்டிகள் பங்கேற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. போட்டியைக் காண வந்த மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று, பாய்ந்து செல்லும் குதிரை வண்டிகளை பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து ரசித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT