தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் 100 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

25th Jun 2022 02:13 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ரூ. 19,04,000 மதிப்பீட்டில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சனிக்கிழமை வழங்கினார்.

தமிழக அரசின் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் அறிமுக விழா கும்மிடிப்பூண்டியில் எம்எல்ஏவும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் கோபி, உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன் ,  கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா  அறிவழகன், ஒன்றிய ஆணையர் வாசுதேவன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் தலைமை தாங்கி பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திருவள்ளூர் மாவட்டத்தில் 1,600 பயனாளிகளுக்கு தமிழக அரசின் ஏழ்மை நிலைமையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி அவர்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் அறிமுக விழா கும்மிடிப்பூண்டியில் துவங்குகிறது.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி  ஒன்றியத்தில் 100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 4 பெட்டை ஆடு , 1 கிடா ஆடு என 5 ஆடுகள்  வழங்கப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் 1 ஆட்டிற்கு 3,500 ரூபாய் என 5 ஆடுகளுக்கு 17,500 ரூபாய், பயனாளிகளுக்கு ஆதார செலவு 1000 ரூபாய், ஆடுகளுக்கு 2 வருடத்திற்கு காப்பீடு தொகை 540 சேர்த்து ஒரு பயனாளிக்கு தலா 19,040 ரூபாய் என 100 பயனாளிகளுக்கு 19,04,000 ரூபாய் மதிப்பில் ஆடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆடுகளை கொண்டு 100 பெண் பயனாளிகளும் தொழில்முனைவோராக மாறி வாழ்வில் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என வாழ்த்தினார்.

நிகழ்வில்  மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ஜி.ரவி, பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், செல்வசேகரன், தேவேந்திரன், எம்.ஆர்.ஸ்ரீதர்,  ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வழி கிரிஜா குமார், மாநெல்லூர் லாரன்ஸ், கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம்,  பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, நகர செயலாளர் அறிவழகன்,  மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கர், பேரூராட்சி கவுன்சிலர் அப்துல் கரீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT