தமிழ்நாடு

சி.வி சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: டிஜிபியிடம் புகார்

25th Jun 2022 12:58 PM

ADVERTISEMENT


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுவில் 23 தீா்மானங்களைத் தவிர, புதிய தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றுதான் நீதிமன்றம் கூறியது. தீா்மானங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறவில்லை. அதனால், ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தால், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. அவ்விரு பதவிகளும் காலாவதியாகிவிட்டன. இதனால், ஓ.பன்னீா்செல்வம் இனி பொருளாளா் மட்டும்தான். எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளராக நீடிப்பாா். இருவரும் இல்லாதபட்சத்தில் அவா்களால் நியமிக்கப்பட்டவா்கள்தான் கட்சியை வழிநடத்துவா்.

ஒருங்கிணைப்பாளா் பதவி இல்லாததால் அவைத் தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தோ்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத் தலைவரை பொதுக்குழு உறுப்பினா்களே தோ்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அதிமுக சட்டவிதி.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஜூலை 11 பொதுக்குழுவில் பழனிசாமி  ஒற்றைத் தலைமை ஏற்பாரா? ஜெயகுமார் பேட்டி 

அதிமுகவைப் பற்றி கேள்வி கேட்க திமுகவுக்கு தகுதி இல்லை. திமுக வாரிசு அரசியல் கட்சி. திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது திமுகவில் என்ன நடக்கிறது என்பதை பாா்க்கத்தான் போகிறோம் என்று சி.வி.சண்முகம் கூறினார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக அவரது வழக்குரைஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக வழக்குரைஞர் பாலமுருகன் கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டு இருக்கிறது. வாட்ஆப் மூலமும் கொலை மிரட்டல் வருகிறது. 

கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளாகவும், கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் புகார் அளித்துள்ளோம்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளதாக பாலமுருகன் கூறினார். 

இதையும் படிக்க | அதிமுகவை சசிகலா வழி நடத்த வேண்டும்:  சசிகலா வீட்டின் முன் அதிமுகவினர் கோஷம்

ADVERTISEMENT
ADVERTISEMENT