தமிழ்நாடு

தூத்துக்குடி மருத்துவக் கல்லுரியில் 30 மாணவர்களுக்கு கரோனா

25th Jun 2022 12:25 PM

ADVERTISEMENT


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு பல மாவட்டங்களில் மெல்ல அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று மாணவர்களிடையே பரவுவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 30 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

200 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில், 30 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கரோனா உறுதியான 30 மாணவர்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT