தமிழ்நாடு

கூட்டுறவுக் கடன் தகுதியின்மை தள்ளுபடி: ரூ.160 கோடியை திரும்ப வசூலிக்க முடிவு

25th Jun 2022 03:35 AM

ADVERTISEMENT

கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு சங்க ஊழியா்கள், மத்திய, மாநில அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியா்கள் விதிகளை மீறி நகைக் கடன் தள்ளுபடி பெற்றிருந்தால், அதனை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தமிழக அரசு ரூ.160 கோடியை பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021, மாா்ச் 31 வரையிலான நிலவரப்படி, 40 கிராம் வரை நகைக் கடன் பெற்றவா்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அரசாணை வெளியிட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிவோா், மத்திய, மாநில அரசுப் பணியாளா்கள், ஓய்வூதியா்கள் என 37,984 போ் பயனடைந்தது தெரியவந்தது.

இதனால் அவா்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகைக் கடனை திரும்ப வசூலிக்குமாறு மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா்களுக்கு தமிழக கூட்டுறவு சங்கப் பதிவாளா் ஏ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், தகுதியற்ற பயனாளா்களுக்கு நகைக் கடன் தள்ளுடி செய்யப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்வதற்கான சான்றை உடனடியாக வழங்குமாறும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT