தமிழ்நாடு

புதுச்சேரி திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை: சீராய்வுக் கூட்டத்தில் முடிவு

25th Jun 2022 09:53 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ், பரிசீலனையில் உள்ள புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டம் புதுவை ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். முதல்வர் என்.ரங்கசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, காவல்துறை இயக்குனர் ஆர். எஸ். கிருஷ்ணியா, மத்திய மனிதவள அமைச்சக அதிகாரி மற்றும் அரசு செயலர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ள புதுச்சேரி தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

புதுவை மாநிலத்திற்கான மத்திய நிதி உதவியை அதிகரித்தல், மத்திய அரசின் திட்டங்களுக்கு 100% நிதி உதவி அளித்தல், நிலம் சம்பந்தமான அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்குதல், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், காவல்துறை நவீன மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

புதுவை மாநிலம் தொடர்பான வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி உறுதியளித்தார். மேலும், மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை  மறுஆய்வு செய்வது என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT