தமிழ்நாடு

கேப்டன் இல்லாத படகு போல அதிமுக உள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் 

25th Jun 2022 07:52 PM

ADVERTISEMENT

அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருக்கிறது. கொள்கையும் இல்லை! கோட்பாடும் இல்லை! தலைமையும் இல்லை, என்ற நிலையில் உள்ளது. 

இதையும் படிக்க- அமித்ஷாவின் பேட்டியைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் கைது

தமிழ்நாடு திராவிட மண் இங்கு பாஜகவிற்கு இடமில்லை, பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக அதிமுகவில் பிரச்னை எழுந்துள்ளது. 

ADVERTISEMENT

பெரும் எதிர்பார்ப்புகளுடன் அண்மையில் கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புடன் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT