தமிழ்நாடு

அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர்: தமிழ்மகன் உசேன்

25th Jun 2022 01:27 PM

ADVERTISEMENT


அதிமுகவில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். 

அதிமுகவில் புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிக்க | ஜூலை 11 பொதுக்குழுவில் பழனிசாமி  ஒற்றைத் தலைமை ஏற்பாரா? ஜெயகுமார் பேட்டி 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர். அதிமுகவுக்கு எடப்பாடி கே.பழனிசாமிதான் தலைமையேற்க வேண்டும் என விரும்புவதாக கூறினார். 

ADVERTISEMENT

அவைத்தலைவர் பணி சவாலான பணி என்றாலும், அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி செல்வேன் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.

இதையும் படிக்க | மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க இதழ் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT