தமிழ்நாடு

அதிமுகவில் அவைத்தலைவரை தேர்வு செய்தது எப்படி? - கோவை செல்வராஜ் கேள்வி

25th Jun 2022 02:15 PM

ADVERTISEMENTஅதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியனால் அவைத் தலைவரை தேர்வு செய்தது எப்படி என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியனால் அவைத் தலைவரை தேர்வு செய்யதது எப்படி என கேள்வி எழுப்பிய கோவை செல்வராஜ், சி.வி.சண்முகம் கூறுவது கேலி கூத்தானது. ஜூலை 11 ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கனவில்தான் நடக்கும். 

இதையும் படிக்க | அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர்: தமிழ்மகன் உசேன்

அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது. அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர்.

ADVERTISEMENT

மேலும், கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் என்றார் செல்வராஜ். 

இதையும் படிக்க | சி.வி சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: டிஜிபியிடம் புகார்

ADVERTISEMENT
ADVERTISEMENT