தமிழ்நாடு

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க இதழ் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

25th Jun 2022 11:11 AM

ADVERTISEMENT


பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளு உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: 

மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு "ஊஞ்சல்" இதழ், உயர்வகுப்பு மாணவர்களுக்கு "தேன்சிட்டு" இதழ், ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" இதழ் மாதம் இருமுறை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்காக, நடப்பு கல்வியாண்டில் ரூ.7.15 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த இதழ்களில் தேசிய மாநில செய்திகள் மட்டுமின்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும், மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும். 

இந்த இதழ்களை வகுப்பறைச் சூழலும் நயம்பட இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புத் திறன்களை வெளிக்கொணர போட்டிகளும், மாணவர்களை ஊக்குவிக்கப் பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலமாக நடத்தப்படும். 

இதையும் படிக்க ஜூன் 27-இல் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள்

ஆசிரியர்களுக்கு என தனித்துவமான படைப்புத் தளத்தை உருவாக்கவும், சமகாலத்தில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT