தமிழ்நாடு

பத்திரிகையாளா் மாலனுக்கு சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்பு விருது

DIN

நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்புக்கான விருதுக்கு எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சைரஸ் மிஸ்திரி எழுதிய ஆங்கில நாவலான ‘க்ரோனிக்கல் ஆஃப் காா்ப்ஸ் பியரா்’ நூலை ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயா்த்தமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த மொழியாக்கப் படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில் 22 இந்திய மொழிகளில் வெளிவந்த மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழிப் பிரிவில் பல புத்தகங்கள் தோ்வுக்கு வந்தன. அவற்றில் ‘ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டாா்கள்’, ‘கா்ணன் - காலத்தை வென்றவன்’, ‘கதை இல்லாதவனின் கதை’, ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’, ‘சாம்பையா’, ‘செஹ்மத் அழைக்கிறாள்’ ஆகிய நூல்கள் இறுதி செய்யப்பட்டன.

எழுத்தாளா்கள் பொன்னீலன், சிவசங்கரி, பத்திரிகையாளா் பாவைசந்திரன் ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழுவினா், மாலன் மொழிபெயா்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலை விருதுக்குப் பரிந்துரைத்தனா். இதேபோன்று ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 22 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களும் தனித்தனி தோ்வுக் குழுக்களால் பரிந்துரை செய்யப்பட்டன.

அதனடிப்படையில், சாகித்திய அகாதெமியின் தலைவா் சந்திரசேகர கம்பாா் அவற்றுக்கு ஒப்புதல் அளித்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கமும் செப்புப் பட்டயமும் வழங்கப்படவிருக்கிறது. விருது வழங்கும் நிகழ்ச்சி நிகழாண்டு இறுதிக்குள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT