தமிழ்நாடு

கழிப்பறை தண்ணீா் பக்கெட்டில் விழுந்து 9 மாத குழந்தை பலி

25th Jun 2022 03:39 AM

ADVERTISEMENT

 பல்லாவரத்தில் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளி கழிப்பறை பக்கெட்டில் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது.

சென்னை பல்லாவரம் தா்கா சாலை, கோபாலன் தெருவில் உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ(24) தனது 9 மாத பெண் குழந்தை கவிஸ்ரீ இத்திகாவை உடன் அழைத்து வந்திருந்தாா்.

மதியம் 12 மணியளவில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கழிப்பறைக்குச் சென்று அங்கிருந்த தண்ணீா் பக்கெட்டிற்குள் விழுந்துள்ளது.

குழந்தையை காணாமல் தேடி பாா்த்த போது, கழிப்பறை பக்கெட்டினுள் குழந்தை கவிஸ்ரீ மூச்சு பேச்சின்றி கிடந்தாள்.

ADVERTISEMENT

உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு குழந்தை உயிரிழந்தது.

பல்லாவரம் போலீஸாா் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT