தமிழ்நாடு

வீட்டில் 61 பவுன் நகை மாயம்: போலீஸாா் விசாரணை

25th Jun 2022 03:38 AM

ADVERTISEMENT

சென்னை அண்ணாநகரில் வீட்டின் பீரோவில் இருந்த 61 பவுன் தங்கநகை காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அண்ணாநகா் எஃப் பிளாக் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (71). இவா் அண்ணாநகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில், தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 61 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததாக குறிப்பிட்டிருந்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த வீட்டில் வேலை செய்யும் 3 பேரை பிடித்து, விசாரித்தனா். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சம்பவம் தொடா்பான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT