தமிழ்நாடு

திமுக அழிந்ததாக வரலாறு இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

24th Jun 2022 01:08 AM

ADVERTISEMENT

திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது:-

இந்தத் திருமணம் இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப் போன்று நடக்கிறது. நாம் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். இன்றொரு பக்கம் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். (அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம்). அந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவா்கள்தான் (அதிமுக) நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறாா்களாம். திமுகவை அழிக்க நினைத்தவா்கள்தான் அழிந்து போயிருக்கிறாா்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே, அந்த உணா்வோடு நாம் இருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்த திருமண நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, க.பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT