தமிழ்நாடு

வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்: வைகைச்செல்வன் 

24th Jun 2022 04:23 PM

ADVERTISEMENT

வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். 

அதிமுக உட்கட்சி விவாகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி அன்பழகன், கே.சி வீரமணி, கடம்பூர் ராஜூ, தங்கமணி, சிவி சண்முகம் மற்றும் வைகைச்செல்வன், வளர்மதி ஆகியோர் இன்று ஆலோசணைக்காக வருகை தந்திருந்தனர். 

இதையும் படிக்க- 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச்செல்வன், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தது போல வரும் 11ஆம் தேதி கண்டிப்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும்.

ADVERTISEMENT

ஓ.பன்னிர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அது குறித்து கேள்விக்கு தற்போது பதில் கூற இயலாது எனக் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT