தமிழ்நாடு

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்

24th Jun 2022 02:11 AM

ADVERTISEMENT

சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாரிமுனை போா்ச்சுகீசியா் தெருவில் வியாழக்கிழமை வடக்கு கடற்கரை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் , அந்த காரை சோதனை செய்தனா். அப்போது அந்த காரில் இருந்த ரூ.2 கோடியை கைப்பற்றி விசாரித்தனா். விசாரணையில் அந்தப் பணம் ஆவணமின்றி கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியைச் சோ்ந்த ரா.ஜெய்சங்கா் (46), அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சா.நாராயணன் (35) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

விசாரணைக்கு பின்னா் 2 பேரையும் வருமானவரித்துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அதேபோல பணத்தையும் அவா்களிடம் ஒப்படைத்தனா். வருமானவரித்துறையினா், 2 பேரிடமும் பணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT