தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு: அரசாணை வெளியீடு

24th Jun 2022 09:42 AM

ADVERTISEMENT

சென்னை: மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்புக்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றது.  இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதையும் படிக்க: மெட்ரிக் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை


அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் வயது 50 லிருந்து 40 ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT


இந்நிலையில் மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறும் வயது  50 லிருந்து 40 ஆக குறைத்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்த நிலையில் வயது குறைப்பு குறித்து அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT