தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்!

24th Jun 2022 04:35 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இதையும் வாசிக்கலாம் | தமிழகத்தில் உண்மையிலேயே கரோனா அதிகரிக்கிறதா? என்ன சொல்கிறது களநிலவரம்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பரவல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அந்தவகையில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரிய வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மீறுவோர் மீது ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT