தமிழ்நாடு

பேருந்து நிறுத்தத்தில் தான் ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்த வேண்டும்: போக்குவரத்துறை உத்தரவு

24th Jun 2022 09:48 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்தை தாண்டியோ, சாலையின் நடுவிலோ அரசுப் பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தக் கூடாது. 

இதையும் படிக்க | குடிமைப் பணித் தோ்வுக்கு அரசின் இலவசப்பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

மேலும், பேருந்து நிறுத்தத்தை விட்டு தள்ளி பேருந்தை நிறுத்துவதால், பயணிகள் பேருந்து ஓடிவந்து பேருந்தில் சிரமப்படுகிறார்கள் எனவும், அப்படி ஓடிவந்து பேருந்தில் ஏறும்போது பயணிகள் கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் சூழ்நிலையும், சில் நேரங்களில் மரணங்கள் தொடர்பான விபத்துகளும் ஏற்பட ஏதுவாகிறது. 

ADVERTISEMENT

எனவே, அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் மட்டும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | பி.இ., பி.டெக். படிப்புகளில் நேரடி இரண்டாமாண்டு சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ADVERTISEMENT
ADVERTISEMENT