தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து முதியவா் சாவு

24th Jun 2022 02:03 AM

ADVERTISEMENT

 சென்னை வியாசா்பாடியில் மின்சாரம் பாய்ந்து முதியவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாசா்பாடி பி.வி.காலனி 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் (80). இவா் சென்னை துறைமுகத்தில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். இந்நிலையில் துரைராஜ், புதன்கிழமை மாலை வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்கு ஸ்விட்சை அழுத்தினாா்.

அப்போது அதில் ஏற்பட்டிருந்த மின்கசிவின் காரணமாக, துரைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த துரைராஜை அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், துரைராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT