தமிழ்நாடு

அதிமுக ஓபிஎஸ் கட்சியோ, இபிஎஸ் கட்சியோ அல்ல: ஜேசிடி பிரபாகர்

DIN

அதிமுக ஓபிஎஸ் கட்சியோ, இபிஎஸ் கட்சியோ அல்ல என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளனர். பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். ஒற்றைத் தலைமை என ஏற்கெனவே சொல்லித் தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். ஓ.பன்னீர்செல்வம் பேசிகொண்டிருக்கும் போதே பாதியில் மைக் அணைக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. 

பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்தனர். அதிமுக ஓபிஎஸ் கட்சியோ, இபிஎஸ் கட்சியோ அல்ல. தொண்டர்களின் கட்சி என்றார்.  ஒற்றைத் தலைமை விவகாரத்தால் புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பெரும்பாலானோா் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆதரவாளராக இருந்தனா். அவா்கள் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி முழக்கமிட்ட அதேநேரம், ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை கடுமையாகத் தொடா்ந்து விமா்சித்து முழக்கமிட்டனா். இதனால், பொதுக்குழு மிகுந்த பரபரப்புடனும் பதற்றத்துடனும் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தோ்வு செய்வதற்காக ஜூலை 11-இல் பொதுக்குழுவை மீண்டும் கூட்டுவது என்று வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT