தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக மிதமான மழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க | 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 7 மணி வரை மழை நீடிக்கும் என்பதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.