தமிழ்நாடு

‘நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும்’: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

21st Jun 2022 06:42 PM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக துவங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

“தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கரோனா

ADVERTISEMENT

மேலும், டெல்டா பகுதிகளில் முன்கூட்டியே கால்வாய்கள் மற்றும் துணை கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கு உத்தரவிடப்பட்டதுடன், சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக மேட்டூர் நீர்தேக்கத்திலிருந்து மே 24ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது.

பொதுவாக, நெல் அறுவடையானது செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பெரும் சேதத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்தாண்டு முன்முயற்சி நடவடிக்கை காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அறுவடை தொடங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT