காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறி முறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி எச்சரிக்கை.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா வைரஸ் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோயம்புத்தூரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
படிக்க | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 250 கன அடி நீர் திறப்பு
நேற்று வரை 172 நபர்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்று பரவல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.
அவ்வகையில் இன்று முதல் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பெரிய வணிக நிறுவனங்களில் குளிர்சாதன இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு: 'காவல் துறை முடிவெடுக்க உத்தரவு'
மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு நிகழ்ச்சிகளில் 50 நபர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் முதல் கட் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைவரும் ஒருங்கிணைந்து தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்
மாவட்ட ஆட்சியர் அறிக்கை முழு விபரம்: இங்கே கிளிக் செய்யவும்