தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

21st Jun 2022 06:13 PM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக்  கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. 

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வருகிறது.  

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

ஆனால், சூரியமூர்த்தி தற்போது கட்சியில் இல்லை என்றும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் கூறி ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து கூட்டாக மனுத்தாக்கல் செய்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | யஷ்வந்த் சின்ஹ யார்? - முழு விவரம்

இந்த வழக்கின் விசாரணை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் என்பதால் வழக்கை முன்னதாக விசாரிக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனுவின் மீதான விசாரணையில் எதிர்தரப்பினர், சூரியமூர்த்தியின் மனுவின் நகல் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, எனவே, பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. 

அதன்படி, சூரியமூர்த்தியின் மனு மீது எதிர்தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்களாக உள்ள அனைவருக்கும் மனுவின் நகலை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT