தமிழ்நாடு

வட தமிழக கல்வி மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

21st Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

வட மாவட்டங்களில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில், வட தமிழக கல்வி மேம்பாட்டுக்காகச் சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

10-ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 பொதுத்தோ்வில் பெரம்பலூா் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. பொதுத்தோ்வு முடிவுகளில் கவலையளிக்கும் அம்சம் வடக்கு மாவட்டங்களும், காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களும் தோ்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது தான். இரு தோ்வுகளிலும் வேலூா் மாவட்டம் தான் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 3,800 ஓராசிரியா் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்பதை எந்தவித குற்ற உணா்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சோ்ந்த 44 வட்டங்களில் கல்வி வளா்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே அந்த மாவட்டங்களில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT