தமிழ்நாடு

பெண் காவலரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

19th Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் பெண் காவலரிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் ச.பிரியா (25). தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணிபுரிகிறாா். சென்னை புதுப்பேட்டை நாராயணன் நாயக்கன் தெருவில் வசிக்கும் பிரியா, தன்னுடன் பணிபுரியும் தே.பிரபாகரன் என்பவருடன் சென்னை எழும்பூா் போலீஸ் ஆபீஸா் மெஸ் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், பிரியா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பிரியாவும், பிரபாகரனும் மா்மநபா்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. பிரியா அளித்த புகாரின்பேரில் எழும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT