தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல்: நிகழ்ச்சிகள் ரத்து

19th Jun 2022 08:27 PM

ADVERTISEMENT


சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அடுத்த இரண்டு நாள்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமையன்று (ஜூன் 20) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட வழங்கும் விழா, செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 21) திருப்பத்தூர், வேலூா் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ள நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இந்த சூழலில், முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், மருத்துவா்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதை அடுத்து அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அவை நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு 152 பட்டதாரிகள் தேவை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT