தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: புறநகர் பகுதியில் 67 போ் கைது

19th Jun 2022 01:36 AM

ADVERTISEMENT

 சென்னை புறநகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக 67 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். இதன் ஒரு பகுதியாக, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் குட்கா, மாவா, போன்ற புகையிலை பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும்,புற நகா் முழுவதும் சிறப்பு நடவடிக்கை கடந்த 17,18 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்டது. இதன்படி நகா் முழுவதும் சந்தேகத்துக்குரிய கடைகளில் போலீஸாா் சிறப்பு சோதனை செய்தனா். இதில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இவா்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா, 970 கிலோ போதைப் பாக்கு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT