தமிழ்நாடு

மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது: மநீம

17th Jun 2022 04:38 PM

ADVERTISEMENT

மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மநீம ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக் கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே,  சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல.

இதையும் படிக்க- ஏமாற்றிய யார்க்கர்கள்: இந்திய அணியில் நடராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

ADVERTISEMENT

இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பதுடன்,  ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT