தமிழ்நாடு

திருச்சி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

15th Jun 2022 03:14 PM

ADVERTISEMENT

திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே, வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (66). அவரது மகன் நெப்போலியன் (39). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (69) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆரோக்கியசாமி அவரது மனைவி தனமேரி (65), மகன் சசிகுமார் (41), ஆகியோர் சேர்ந்து, தனிஸ்லாஸ், நெப்போலியன் ஆகியோரை குத்து கோலால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் இறந்தனர்.

இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து, சசிகுமார், ஆரோக்கியசாமி, தனமேரி ஆகியோரை கைது செய்தார்.

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனவேல், இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும், ஆரோக்கியசாமிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனமேரிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT