தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பூரணலிங்கம் சந்திப்பு

15th Jun 2022 12:34 PM

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான பூரணலிங்கம், தான் எழுதிய 'வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' எனும் நூலை முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.  

மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா. பூரணலிங்கம் எழுதிய 'வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் சமீபத்தில் நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் நூலை வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான எம். ராஜாராம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில்  அரசுத் துறைச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமான முன்னாள், இன்னாள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

இதையடுத்து பூரணலிங்கம், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தான் எழுதிய 'வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' எனும் நூலை வழங்கினார். இந்நிகழ்வின்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் மற்றும் நிறுவனத்தின் பொது மேலாளர் தி. ரெத்தினசபாபதி ஆகியோர் உடனிருந்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | திருக்குறளுக்கு இணையானதொரு நூல் இல்லை - நீதிபதி ஆர். மகாதேவன் பேச்சு

ADVERTISEMENT
ADVERTISEMENT