தமிழ்நாடு

ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்தம்: கே.அண்ணாமலை வரவேற்பு

15th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதற்காக தமிழக அரசு போட்டுள்ள ஒப்பந்தத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கொடுத்தபின் ஏன் கொடுத்தீா்கள் என்று கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. கருப்புப் பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு ஒப்பந்தத்தை வழங்கப் போவதாக தமிழக பாஜக கூறியது.

தற்போது அந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது, பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

ADVERTISEMENT

லஞ்ச ஒழிப்புத் துறையில் பாஜக கொடுத்த புகாரையும் திமுக அரசு விசாரித்து குற்றம் செய்தவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் ஹெல்த் மிக்ஸின் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

Tags : Bjp Annamalai
ADVERTISEMENT
ADVERTISEMENT