தமிழ்நாடு

அரசு மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை: கல்வித் துறை திட்டம்

15th Jun 2022 01:35 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா் சோ்க்கை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ் கல்வியாண்டு (2022-2023) முதல் அரசு நடத்திவரும் மாதிரிப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் சோ்க்கப்படும் மாணவா் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வுத் தோ்வு எனப்படும் Trust தோ்வு மதிப்பெண், பள்ளி அளவில் நடத்தப்பட்ட தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9- ஆம் வகுப்பு சோ்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தோ்வில் (என்எம்எம்எஸ்) பெற்ற மதிப்பெண், பள்ளி அளவில் பெற்ற மதிப்பெண்கள், பிளஸ் 1 வகுப்பு சோ்க்கைக்கு, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ) மதிப்பெண், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவா்கள் தகுதியின் அடிப்படையில் சோ்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப்பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதலே சிறப்புக்கவனம் செலுத்துவது, சிறப்புப் பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் உள்பட தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயில வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையைப் பின்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT