தமிழ்நாடு

'ஒற்றைத் தலைமை'.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முழக்கம்

14th Jun 2022 12:58 PM

ADVERTISEMENT

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று, தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் சிலர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் சிலர், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், கட்சியின் தலைவராக ஓபிஎஸ்தான் வர வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் செயற்குழு, பொதுக்குழு நடத்தப்படுவதையொட்டி, மாவட்டச் செயலா்கள் கூட்டம்  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தனர்.

ADVERTISEMENT

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. அங்குள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, கட்சியின் தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் ஆகியோா் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் எத்தகைய தீா்மானங்களை நிறைவேற்றுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
 

Tags : OPS ADMK eps
ADVERTISEMENT
ADVERTISEMENT