தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்

14th Jun 2022 01:37 PM

ADVERTISEMENT

 

பழனி  முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நாளை மறுநாள் முதல் ஜூலை 30 வரை நிறுத்தப்படுகிறது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சுவாமி தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் சென்று வர ரோப் கார், மின்இழுவை ரயில் சேவைகளும் உள்ளன. 

இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும். 

ADVERTISEMENT

அதன்படி, வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை அடுத்த 45 நாள்களுக்கு நிறுத்தப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT