தமிழ்நாடு

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர்நீதிமன்றம்

14th Jun 2022 06:05 PM

ADVERTISEMENT

 

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பைக் காலி செய்யக்கோரி காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் சமீப காலங்களில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகவும் தொடர்ந்து இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு கவனிப்பதில்லை எனவும் காவல்துறையினர் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் அரசு சார்பில் அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற ஜுன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT