தமிழ்நாடு

ராசிபுரம்: விபத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 2 பேர் வேன் மோதி பலி

12th Jun 2022 08:29 AM

ADVERTISEMENT


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு காவல்துறையினர் சுற்றுலா வேன் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இராசிபுரம் தேசிய நெடுஞ்சாலை ஏ.கே. சமுத்திரம் அருகே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாற்றுப்பாதையில் செல்ல மணல் மூட்டைகளை அடுக்கி தகர டிரம்கள் வைத்திள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிவேகமாக மதுரையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார்  மாற்றுப்பாதை போர்டுகளை கவனிக்காமல் நேரே சென்று தடுப்பு தட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.  

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

ADVERTISEMENT

அப்போது திருநள்ளாறு தஞ்சாவூரிலிருந்து இளம்பிள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் சாலை நெரிசல் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இருவர் மீது வேகமாக வந்து மோதியது. இதில் புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகன், தலைமை காவலர் தேவராஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடம் வந்த ராசிபுரம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் பாலரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து காவல் துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் விபத்துக்குள்ளான கார் மதுரையில் இருந்து வந்ததாகவும் தூக்கக் கலக்கத்தில் வந்ததால் தடுப்பு வேலியில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதை ஒழுங்குபடுத்த வந்த ராசிபுரம் காவல்துறையை சேர்ந்த தேவராஜ், சந்திரசேகர் இருவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்கும்போது, அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்ததில் ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். ஓட்டுநரை கீழே இறங்கச் சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போது  திருநள்ளாரில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த சுற்றுலா வேன் காவலர்கள் மீது அதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா: முகக் கவசம் - சமூக இடைவெளி அவசியம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ADVERTISEMENT
ADVERTISEMENT