தமிழ்நாடு

பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்: பள்ளி கல்வித்துறை

12th Jun 2022 11:37 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்பதால், 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகளை திறக்க, மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதே சமயம், பள்ளி அமைவிடம்,போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் தொடங்கும் நேரம், முடிவடையும் நேரம் எப்போது என்பதை பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனினும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து,11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT