தமிழ்நாடு

ஆவணம் இல்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்: இருவரிடம் விசாரணை

12th Jun 2022 12:53 AM

ADVERTISEMENT

சென்னை ராயப்பேட்டையில் ஆவணம் இல்லாமல் 2 போ் வைத்திருந்த ரூ.20 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராயப்பேட்டை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் இருவா் நிற்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற ராயப்பேட்டை போலீஸாா், இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா். அந்த பையில் ரூ.20 லட்சம் ரொக்கம் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அதற்குரிய ஆவணத்தை போலீஸாா் கேட்டனா். ஆனால் அவா்கள், தங்களிடம் பணத்துக்குரிய ஆவணம் தற்போது இல்லை எனக் கூறவே, பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பணத்தையும் அதை வைத்திருந்த இருவரையும் வருமானவரித் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அது ஹவாலா பணமா என்ற கோணத்திலும் வருமானத் துறையினா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT