தமிழ்நாடு

காலமானார் சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல்

12th Jun 2022 11:55 AM

ADVERTISEMENT

 

திருச்சி: சுதந்திரப் போராட்ட தியாகி பி. ராஜதுரை மைக்கேல் (101) வயதுமுதிர்வு காரணமாக காலமானார்.

திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பிறந்தவர். நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 3 முறை சிறை சென்றவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியவர். மொரார்ஜி தேசாய், சஞ்சீவரெட்டி, கக்கன், விஷ்ணுராம் மேதி, அறிஞர் அண்ணா உள்ளிட்டோருடன் நெருக்கமாக பழகியவர். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயமும் பெற்றவர்.

திருச்சியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்தவர், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை மாலை காலமானார்.

ADVERTISEMENT

அவரின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சி பொன்னகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இல்லத்தில் நடத்தப்பட்டு ஓயாமரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவருக்கு, 2 மகன்கள், 4 மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர்.

தொடர்புக்கு: 97178-94427.


இதையும் படிக்க |
பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்: பள்ளி கல்வித்துறை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT